×

பஞ்சாப் மாஜி முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மரணம்: 2 நாட்கள் துக்கம் அனுசரிக்க ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மரணம் அடைந்ததால் நாடு முழுவதும் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் முன்னாள் முதலமைச்சரும், சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) கட்சித் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் (95), உடல் நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் பதிண்டாவின் பாதல் கிராமத்தில் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரகாஷ் சிங் பாதல் மரணத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் மாநில முதல்வராக 1970-71, 1977-80, 2007-2017 ஆகிய காலகட்டத்தில் முதல்வராக பதவி வகித்த பிரகாஷ் சிங் பாதலுக்கு அவரது மனைவி சுரிந்தர் கவுர் பாதல், மகன் சுக்பீர் சிங் பாதல், மருமகள் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாடு முழுவதும் இன்றும், நாளையும் இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அனைத்து அரசு கட்டிடங்களிலும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கும் என்றும், அரசு நிகழ்ச்சிகள் மேற்கண்ட இரண்டு நாட்களுக்கும் நடைபெறாது என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

The post பஞ்சாப் மாஜி முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மரணம்: 2 நாட்கள் துக்கம் அனுசரிக்க ஒன்றிய அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Punjab ,Chief Minister ,Prakash Singh Badal ,Union govt ,New Delhi ,Punjab Chief Minister ,
× RELATED வேட்பாளரின் பிரசாரத்திற்கு...